ADDED : செப் 29, 2026 08:12 PM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: அனுமதியின்றி வெடி மருந்துகள் வைத்திருந்த வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மயிலம் போலீசார் தென்களவாய் கிராமத்தில் உள்ள பிரசாந்த்குமார் நிலத்திற்கு அருகே நேற்று ரோந்து சென்றனர். அங்கு, அனுமதியின்றி எளிதில் தீப்பற்றக்கூடிய வகையில், 140 ஜலட்டின் குச்சிகள், 25 டி.குவார்டு வெடிமருந்துகள் வைத்திருந்த மரக்காணம் அருகே வன்னிப்பேரை சேர்ந்த காசிநாதன் மகன் தேவநாதன்,33; வானுார் அருகே எரிமலை எரியூரை சேர்ந்த செல்லதுரை,40; ஆகியோர் மீது வழக்குப்பதிந்து தேவநாதனை கைது செய்தனர்.
