/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மனு
/
கலெக்டர் அலுவலகத்தில் இளம்பெண் மனு
ADDED : ஆக 29, 2025 11:36 PM

விழுப்புரம் : கணவர் இறப்பில் தொடர்புடைய நபர்களை கைது செய்யக்கோரி இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த கருவேப்பிலைபாளையத்தை சேர்ந்த துளசி மனைவி ரம்யா, 19; என்பவர் கொடுத்துள்ள மனு:
எனக்கு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 6 மாத குழந்தை உள்ளது. என் கணவர் துளசி ஆடு வியாபாரம் செய்து வந்தார். கடந்த, 20ம் தேதி ஆடு விற்பனை தொடர்பாக விழுப்புரம் சென்றவர், ஜானகிபுரம் மேம்பாலம் அருகே ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.
அவரை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்து கடந்த, 26ம் தேதி இறந்துவிட்டார். இது குறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து இருவரை மட்டும் கைது செய்துள்ளனர்.
என் கணவர் இறப்பில் மேலும் சிலர் சம்மந்தப்பட்டுள்ளனர். அவர்களையும் கைது செய்ய வேண்டும். எனக்கும், என் குழந்தைக்கும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.