ADDED : மார் 19, 2026 04:04 AM
அ நிறம் | அளவு
விழுப்புரம்: காணை அருகே முதியவரை குடிபோதையில் தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காணை அருகே சோழகனுார் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபிரகாசம்.60; இவர், நேற்று முன்தினம் இங்குள்ள பஸ் நிறுத்தத்தில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, அதே கிராமத்தை சேர்ந்த நந்தன் மகன் அய்யப்பன்,35; என்பவர், குடிபோதையில் வந்து ஞானபிரகாசத்திடம் தகராறு செய்ததோடு, திட்டி, தாக்கி மிரட்டல் விடுத்துள்ளார். காணை போலீசார் வழக்குப் பதிந்து அய்யப்பனை கைது செய்தனர்.
