/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு பஸ் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
/
அரசு பஸ் கண்ணாடி உடைத்த வாலிபர் கைது
ADDED : செப் 20, 2024 09:58 PM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அரசு பஸ்சின் கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு பஸ்சை, கடந்த 17ம் தேதி காலை, தஞ்சாவூர் மாவட்டம், கீழ்ஆத்துக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த டிரைவர் மணிகண்டன், 40; ஓட்டிச் சென்றார்.
விழுப்புரம் மாவட்டம், கோலியனுார் அடுத்த ஆழங்கால் பகுதிக்கு வந்தபோது, டிரைவர் அங்குள்ள டீ கடை அருகே பஸ்சை நிறுத்தியுள்ளார்.
அப்போது, பின்னால் பைக்கில் வந்த விழுப்புரம் அடுத்த சொக்கம்பாளையத்தைச் சேர்ந்த மணிக்கண்ணன் மகன் ஆகாஷ், 20; என்பவர், திடீரென பஸ் டிரைவரிடம் தகராறு செய்து, பஸ்சின் பின் பக்க கண்ணாடியை கல் வீசி தாக்கி உடைத்து விட்டு தப்பியோடினார்.
இது குறித்து, பஸ் டிரைவர் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து, ஆகாஷை நேற்று கைது செய்தனர்.