/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
காரில் பட்டாசு எடுத்து சென்ற வாலிபர் கைது
/
காரில் பட்டாசு எடுத்து சென்ற வாலிபர் கைது
ADDED : ஆக 28, 2025 11:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: காரில் பட்டாசு எடுத்து சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சதீஷ், சுந்தரிப்பாளையம் மேம்பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது, விக்கிரவாண்டி மார்க்கத்தில் இருந்து வந்த காரை சோதனை செய்தபோது, கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த மேலிருப்பை சேர்ந்த விஜய், 29; என்பவர் காரில் அஜாக்கிரதையாக 14 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை எடுத்துச்சென்றது தெரியவந்தது.
போலீசார் வழக்குப்பதிந்து விஜயை கைது செய்து, பட்டாசுகளை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.