/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவி கர்ப்பம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
/
பள்ளி மாணவி கர்ப்பம் 'போக்சோ'வில் வாலிபர் கைது
ADDED : ஜன 07, 2025 06:29 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அருகே அரசுப்பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை 'போக்சோ'வில் போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயதுடைய மாணவியுடன், கிளியனுார் அண்ணா நகரை சேர்ந்த ஆகாஷ் (எ) வெங்கடபதி, 23; நெருங்கி பழகி வந்துள்ளார். அதில் அந்த பள்ளி மாணவி, 2 மாத கர்ப்பமாகியுள்ளார்.
இது குறித்து மாணவியின் பெற்றோர், கோட்டக்குப்பம் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் 'போக்சோ' பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து ஆகாைஷ கைது செய்தனர்.

