ADDED : ஆக 27, 2025 11:08 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவலுார்பேட்டை: மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மேல்மலையனுார் அருகே உள்ள ஒரு கிராமத்தில்,கடந்த, 23ம் தேதி திரும ணமாகாத, 48; வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் நள்ளிரவில், தனியாக வீட்டில் துாங்கி கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டில் புகுந்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, தப்பி ஓடி விட்டார்.
புகாரின் பேரில் மேல்மலையனுார் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.அதே பகுதியை சேர்ந்த சையத்காதர், 28 என்பவரை விசாரித்த போது அவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

