/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
/
கஞ்சா விற்ற வாலிபர் குண்டாசில் கைது
ADDED : அக் 15, 2025 11:04 PM

விழுப்புரம்: கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.
கண்டமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார், கடந்த செப்., 15ம் தேதி, நவமால்மருதுார் கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு, அதே கிராமத்தை சேர்ந்த குழந்தைவேலு மகன் பிரவீன்,24; என்பவர் இளைஞர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்தார். அதை போலீசார் கண்டறிந்து அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர் மீது, கண்டமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கஞ்சா வழக்குகள் சில நிலுவையில் உள்ளன.
இதையொட்டி, அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில் நேற்று கண்டமங்கலம் போலீசார் பிரவீனை, குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.