/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பெட்டிக்கடையில் குட்கா விற்ற வாலிபர் கைது
/
பெட்டிக்கடையில் குட்கா விற்ற வாலிபர் கைது
ADDED : ஏப் 27, 2025 04:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோட்டக்குப்பம், : கோட்டக்குப்பம் அருகே பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 20 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில், குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக போலீக்கு தகவல் கிடைத்தது. கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர்.
அப்போது, கீழ்புத்துப்பட்டு எல்லத்தரசு பகுதியில் ஆறுமுகம், 30; என்பவருக்கு சொந்தமான பெட்டிக்கடையில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்து விற்பது தெரியவந்தது. உடன் அவரை கைது செய்து 20 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

