/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது
/
மதுபாட்டில் கடத்தல் வாலிபர் கைது
ADDED : டிச 29, 2025 06:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுபாட்டில்களை கடத்தி வந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாலமுரளி தலைமையில் போலீசார், நேற்று மாலை, மயிலம் அடுத்த பெரும்பாக்கம் செக்போஸ்ட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புதுச்சேரியிலிருந்து பல்சர் பைக்கில் வந்த வாலிபரை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், புதுச்சேரியிலிருந்து விலை உயர்ந்த 7 மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பிடாகம் கிராமத்தைச் சேர்ந்த வீரமணி, 28; என்பவரை கைது செய்து, பைக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

