ADDED : நவ 06, 2024 10:46 PM

வானுார் ; வானுார் அருகே வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் அடுத்த திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஜவகர் நகரை சேர்ந்தவர் முருகன், 43; இவர் சேதராப்பட்டில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 4ம் தேதி மதியம் சாப்பாட்டிற்கு வந்த அவர் வீட்டின் தனது பைக்கை நிறுத்தி விட்டு, வீட்டிற்குள் சென்றுள்ளார்.
பின்னர் வந்து பாத்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அக்கம் பக்கத்தில் விசாரித்தில், இருவர் பைக்கை தள்ளி சென்றதாக தெரிவித்தனர்.
புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி., கேமிராவில் ஆய்வு செய்தனர். அதில் பதிவான அடையாளங்களை வைத்து, இடையஞ்சாவடி,களத்துமேட்டு தெரு சேர்ந்த ஏழுமலை அருள்குமார், 21; என்பவரை பிடித்து விசாரித்தனர்.
அதில் அவரும், அச்சரம்பட்டு பகுதியை சேர்ந்த சந்தோஷ், 20; என்பவரும் சேர்ந்து பைக்கை திருடியதை ஒப்புக்கொண்டார். அதன் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். சந்தோைஷ தேடி வருகின்றனர்.