/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இளம் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது
/
இளம் பெண்ணுக்கு மிரட்டல்: வாலிபர் கைது
ADDED : அக் 31, 2025 11:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி: இளம்பெண்ணை காதலிக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த, 19 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனியார் கல்லுாரியில் படித்து வருகிறார்.
அவர் செஞ்சி அடுத்த செல்லபிராட்டியை சேர்ந்த அஜித்குமார், 24; என்பவருடன் பேசி பழகி வந்தார். அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் நட்பை முறித்து கொண்டார்.
இந்நிலையில் சமீபத்தில் அவரை அஜித்குமார் வழிமறுத்து, காதலிக்க வற்புறுத்தி மிரட்டல் விடுத்துள்ளார்.
இது குறித்த புகாரின் பேரில் பெரியதச்சூர் போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

