ADDED : ஜன 08, 2024 04:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார் அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில்கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த எம்.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் சின்ன கவுண்டர், 32; இவர், கடந்த 1ம் தேதி 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சின்னகவுண்டரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.