ADDED : அக் 31, 2024 07:27 AM

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடைகளுக்கு விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தைச் சேர்ந்த பூங்காவனம் மகன் சந்தோஷ்குமார்,20; இவர், நல்லாப்பாளையம், கருவாட்சி,கடையம் உள்ளிட்ட பகுதியிலுள்ள கடைகளுக்கு குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கண்டாச்சிபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் மழவந்தாங்கல் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடைகளுக்கு சப்ளை செய்வதற்காக குட்கா பொருட்களை எடுத்துவந்த சந்தோஷ்குமாரை போலீசார் பிடித்தனர்.
அவரிடமிருந்து 22 கிலோ தடை செ்ய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய பைக்கை பறிமுதல் செய்தனர்.
சந்தோஷ்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.