/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
/
பைக் மீது லாரி மோதி வாலிபர் பலி
ADDED : நவ 18, 2025 07:38 AM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி, பெரியகாலனி பகுதியைச் சேர்ந்த பிச்சமுத்து மகன் லோகேஸ்வரன், 24; அதே பகுதியைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி மகன் தெய்வேந்திரன், 26: இருவரும் கட்டடத் தொழிலாளி. நேற்று இருவரும் வேலைக்கு சென்று பைக்கில், இரவு 7:00 மணியளவில் வீடு திரும்பினர்.
பைக்கை லோகேஸ்வரன் ஓட்டினார். மதுரப்பாக்கம் அடுத்த எம்.குச்சிபாளையம் அருகே வந்த போது எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
இவ்விபத்தில் லோகேஸ்வரன் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த தெய்வேந்திரன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விக்கிரவாண்டி போலீசார் .விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

