ADDED : ஜூலை 12, 2025 03:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: பைக்கில் சென்ற வாலிபர் மீது அரசு பஸ் மோதியதில் உயிரிழந்தார்.
திண்டிவனம், டி.வி.நகர் முதல் தெருவை சேர்ந்தவர் சரவணன் மகன் பார்த்தீபன், 25; இவர் நேற்று இரவு 8:45 மணிக்கு உதயம் நகரிலிருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில், சென்று கொண்டிருந்தார்.
அப்போது, விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் பைக் மீது, மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பலத்த அடிபட்ட பார்த்தீபன், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லும் போது, வழியிலேயே இறந்துவிட்டார்.
விபத்து தொடர்பாக திண்டிவனம் டவுன் போலீசார், அரசு பஸ் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.