ADDED : ஜன 26, 2026 03:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம்: மரக்காணம் அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாலிபர் இறந்தார்.
மரக்காணம் அடுத்த வடகோட்டிபாக்கத்தைச் சேர்ந்தவர் செல்வம், 40; இவர், நேற்று முன்தினம் மரக்காணத்தில் இருந்து திண்டிவனம் நோக்கி பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
ஆலத்துார் கூட்ரோடு அருகே பின்னால் வந்த வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த செல்வம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இறந்தார்.
மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

