/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் பலி
/
பூச்சிக்கொல்லி மருந்து குடித்து வாலிபர் பலி
ADDED : ஜூலை 16, 2025 01:09 AM
திருவெண்ணெய்நல்லுார்,: பூச்சி மருந்து குடித்து வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் ரவிவர்மன் மகன் லோகேஸ்வரன், 24; ஏ.சி., மெக்கானிக்.
இவருக்கு கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி இரவு 8:30 மணிக்கு திடீரென வலி அதிகமானது.
இதனால் மனமுடைந்தவர் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று காலை 8:00 மணிக்கு, உயிரிழந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிவு விசாரித்து வருகின்றனர்.