UPDATED : ஆக 26, 2026 07:15 PM
ADDED : ஆக 26, 2026 07:10 PM

விழுப்புரம்: விழுப்புரத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்த இளைஞர் திடீரென மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் முத்தோப்பு அகரம் பாட்டையை சேர்ந்தவர் ஜலீல்அகமது மகன் அப்துல் அஜீஸ்,40; இவர், சவுதி அரேபியாவில் தங்கி கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன் இவர் தனது சொந்த ஊரான விழுப்புரம் வந்தார்.
இந்நிலையில் அவர் காலை 8:00 மணிக்கு தனது நண்பர்களோடு விழுப்புரம், சாலாமேடு பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார். அப்போது,
திடீரென மயங்கி கீழே விழுந்தார். அங்கிருந்த சக நண்பர்கள், அப்துல் அஜீசை மீட்டு சிகிச்சைக்கு, விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு கொண்டு சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர் அவர், இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
