ADDED : ஆக 30, 2025 11:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: வளவனுாரில் பைக் மரத்தின் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.
விழுப்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை மகன் அசோக், 29; கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை 11:30 மணிக்கு அவரது நண்பர் ஹரிபாபு, 26; என்பவரை பைக்கில் ஏற்றிக்கொண்டு, புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி சென்று வந்து கொண்டிருந்தார்.
வளவனுார் அருகே வந்தபோது, எதிர்பாராதவிதமாக பைக் நிலைதடுமாறி, சாலையோரமுள்ள மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், அசோக் பலத்த காயமடைந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்தார். ஹரிபாபு கால் முறிந்து, பலத்த காயத்துடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.