/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் குண்டாசில் கைது
/
குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் குண்டாசில் கைது
குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் குண்டாசில் கைது
குற்ற சம்பவங்களில் தொடர்புடைய வாலிபர் குண்டாசில் கைது
ADDED : அக் 10, 2024 04:12 AM

விழுப்புரம்: விக்கிரவாண்டியில் கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை அறிஞர் அண்ணா தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் முகிலன், 23; இவர், கடந்த ஆக.23ம் தேதி, மேலக்கொந்தை பஸ் நிறுத்தம் அருகே தனது நண்பர் சந்துருவிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த, அதே பகுதியை சேர்ந்த மகாராஜா என்பவரை மறித்து, எங்களை பற்றி போலீசுக்கு தகவல் தருகிறாயா என கேட்டு, திட்டி, கத்தியால் தாக்க முயன்றுள்ளனர். இதனையடுத்து, இருவரையும் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில், கொலை வழக்கு, கொலை மிரட்டல், கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புள்ள முகிலனின் குற்ற நடவடிக்கையை தடுக்கும் வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும் என விழுப்புரம் எஸ்.பி., தீபக் சிவாச் பரிந்துரையின் பேரில், அவரை குண்டாசில் கைது செய்ய, கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.
இதனையடுத்து, விக்கிரவாண்டி போலீசார், முகிலனை நேற்று குண்டாசில் கைது செய்து கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.