/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் வாலிபர் கடத்தல்; போலீஸ் தீவிர விசாரணை
/
திண்டிவனத்தில் வாலிபர் கடத்தல்; போலீஸ் தீவிர விசாரணை
திண்டிவனத்தில் வாலிபர் கடத்தல்; போலீஸ் தீவிர விசாரணை
திண்டிவனத்தில் வாலிபர் கடத்தல்; போலீஸ் தீவிர விசாரணை
ADDED : ஜூன் 05, 2025 07:37 AM

திண்டிவனம்; திண்டிவனத்தில் மர்ம நபர்களால் வாலிபர் கடத்தப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம், பெரியசாமி பிள்ளை தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் மகன் கார்த்திக், 21; தாலுகா அலுவலகம் எதிரில் பங்க் கடை வைத்துள்ளார். இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு பங்க் கடையை மூடிவிட்டு, பைக்கில், மொளசூரில் உள்ள தனியார் பார்சல் கம்பெனிக்கு சென்றுள்ளார்.
அப்போது, தனது தந்தையிடம் போனில், தன்னை யாரோ துரத்துவதாக தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, கார்த்திக்கை தேடி அவரது தந்தை சென்றபோது, கார்த்திக்கின் பைக், புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு வங்கி ஏ.டி.எம்., மையம் எதிரில் நிறுத்தப்பட்டிருந்தது. அவரது மொபைல் போன் 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது.
இதுகுறித்து ரவிச்சந்திரன், 55; கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திக் கடத்திச் செல்லப்பட்டாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என, விசாரித்து வருகின்றனர்.