ADDED : ஜூலை 15, 2025 09:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,; பண்ருட்டி அருகே புலவனுார் கிராமத்தை சேர்ந்தவர் முருகன் மகன் சுசேந்தர், 20; இவர், பி.சி.ஏ., படித்து முடித்து, புதுச்சேரியில் தனியார் ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்த நிலையில், வளவனுாரில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார்.
இவர், தனியாக டிராவல்ஸ் நிறுவனம் துவங்க பணம் ரூ.20 லட்சம் தந்தையிடம் கேட்டார். இந்த பணத்தை முருகன் தர மறுத்ததால் கோபித்து கொண்டு நேற்று முன்தினம் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை.
பல இடங்களில் தேடியும் அவரை காணவில்லை. முருகன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து சுசேந்தரை தேடி வருகின்றனர்.