/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வேகமாக பைக் ஓட்டிய வாலிபர்கள் கைது
/
வேகமாக பைக் ஓட்டிய வாலிபர்கள் கைது
ADDED : நவ 18, 2025 06:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் அதிவேகமாக பைக் ஓட்டிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் அரசு மருத்துவமனை சந்திப்பு அருகே, சப் இன்ஸ்பெக்டர் சுதன் மற்றும் போலீசார், நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பொது மக்களை அச்சுறுத்தும் வகையில், அதிவேகமாக பைக் ஓட்டி வந்த, வண்டிமேடு பகுதி வெங்கடேசன் மகன் மணிகண்டன், 20; என்பவரை கைது செய்தனர்.
இதே போல், விழுப்புரம் பைபாஸ் சாலை அருகே பைக்கில் அதிவேகமாக சென்ற, விழுப்புரம் வி.மருதுார் மாரிமுத்து மகன் லோகேஷ்வரன்,21; மீதும், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர்.

