/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மண்டல உள்ளரங்க விளையாட்டு போட்டி
/
மண்டல உள்ளரங்க விளையாட்டு போட்டி
ADDED : செப் 25, 2025 03:51 AM

விழுப்புரம் : விழுப்புரம், ஏழுமலை பாலிடெக்னிக் கல்லுாரியில் சமீபத்தில், நாகை - புதுச்சேரி மண்டல உள்ளரங்க விளையாட்டு போட்டி நடந்தது.
இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக தலைவர் செல்வமணி செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ஆமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கி, வென்ற மாணவர்களை பாராட்டி, பரிசளித்தார்.
உடற்பயிற்சி ஆசிரியர்கள் தமிழ்செல்வன், பிரவீன்ராஜ், இயந்திரவியல் துறை ஆசிரியர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், டேபிள் டென்னிஸ் விளையாட்டில் ஏ.டி.ஜே., தர்மாம்பாள் கல்லுாரி முதலிடத்தை பிடித்தது. ஏ.வி.சி., கல்லுாரி இரண்டாம் இடத்தை பிடித்தது. அதே போல், கேரம் போட்டியில் ஸ்ரீ மகாலட்சுமி பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடத்தையும், காரைக்கால் பாலிடெக்னிக் கல்லுாரி இரண்டாவது இடத்தையும் தட்டி சென்றது.
செஸ் போட்டியில் காரைக்கால் பாலிடெக்னிக் கல்லுாரி முதலிடத்தையும், ஏ.வி.சி., கல்லுாரி இரண்டாம் இடத்தை பிடித்தது. இதில் பங்கேற்ற அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
துணை முதல்வர் சங்கர் நன்றி கூறினார்.