sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்

/

ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்

ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்

ஒரு சில மாதத்திலே சேதமுற்ற வாறுகால், ரோடு : வாகனங்கள் செல்ல முடியாத அவலம்


ADDED : ஜூலை 13, 2011 10:17 PM

Google News

ADDED : ஜூலை 13, 2011 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகரில் 36 லட்சம் செலவில் போடப்பட்ட ரோடு ஒரு சில மாதங்களிலேயே வாறுகால் இடிந்து, குண்டும் குழியாகி வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.

விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க 2010ல் 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் 25வது வார்டுக்குட்பட்ட கட்டையாபுரத்திலுள்ள ஆவுலயப்பசாமி கோயில் தெருவில் 36 லட்சம் ரூபாய் மதிப்பில்ரோடு மற்றும் வாறுகால் அமைக்கப்பட்டது. கடந்த ஓர் ஆண்டிற்கு முன் வேலை முடிவு பெற்ற நிலையில், ஒரு சில மாதங்களிலேயே வாறுகால் இடிந்து, ரோடுகள் குண்டும் குழியுமாக மாறி உள்ளது.



இதனால் வாகனத்தில் செல்வோர், ஆர்.டி.ஓ., ஆபிசில் டிரைவிங் லைசன்ஸ் பெற எட்டு போட வேண்டியது போல் வளைந்து நெளிந்து ஓட்ட வேண்டியுள்ளது. இதை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்ளாமல் உள்ளது. 'நகராட்சி கவுன்சிலர்களும் கான்ட்ராக்டரிடம் தங்களுக்குரிய கமிஷனை பெற்றுக் கொண்டு எதையும் கண்டு கொள்ள வில்லை,' என, இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.



சப் காண்ட்ரக்டர் சிவக்குமார் கூறியதாவது: தெருவில் 'டாரஸ்' லாரிகள் செல்வதால் வாறுகால் இடிக்கப்பட்டு உடைந்து விட்டது, ரோடும் இறங்கி விட்டது. ஏற்கனவே இது போன்று நிகழ்ந்ததால் மீண்ட ரோடு போட்டு கொடுக்கப்பட்டது , என்றார். வார்டு கவுன்சிலர் வள்ளிக்குட்டி ராஜா கூறுகையில்,''லாரி செல்வதால் சேதம் ஏற்படுகிறது.நான் ஏற்கனவே ரோடு சரியில்லை என எழுதி கொடுத்ததால் மீண்டும் வேலை பார்த்தனர் ,'' என்றார்.










      Dinamalar
      Follow us