sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாறுகால்களின் மீது ஆக்கிரமிப்பு :சுத்தம் செய்ய முடியாமல் பணியாளர்கள் தவிப்பு

/

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாறுகால்களின் மீது ஆக்கிரமிப்பு :சுத்தம் செய்ய முடியாமல் பணியாளர்கள் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாறுகால்களின் மீது ஆக்கிரமிப்பு :சுத்தம் செய்ய முடியாமல் பணியாளர்கள் தவிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூரில் வாறுகால்களின் மீது ஆக்கிரமிப்பு :சுத்தம் செய்ய முடியாமல் பணியாளர்கள் தவிப்பு


ADDED : ஜூலை 15, 2011 10:00 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி வாறுகால்களின் மேல் ஆக்கிரமிப்பால், சுகாதார பணியாளர்களால் சுத்தம் செய்ய முடியாமல், கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சிக்குட்பட்ட மாரியம்மன்கோயில் தெரு, கூனங்குளம் தெரு உள்ளிட்ட பெரும்பாலான பகுதி வாறுகால்களின் மீது வாசல் படி, கழிப்பறை போன்றவைகள் கட்டப்பட்டுள்ளன. இதனால் வாறுகால்கள் மண் மேடாகி கழிவுநீர் செல்ல வழியின்றி தேங்குகிறது. அந்த இடங்களில் வாறுகால்களை சுத்தம் செய்ய முடியாத நிலையில் சுகாதார பணியாளர்கள் உள்ளனர். பல இடங்களில் வீடுகளிலிருந்து மனித கழிவுகள் நேரடியாக வாறுகால்களில் விழும் படியாக செய்துள்ளனர். இக் கழிவுகளால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.கொசு தொல்லையும் அதிகரித்து, மக்களும் கடும் நோய்க்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறு மழை பெய்தாலே கழிவு நீர் வாறுகால்கள் நிரம்பி தெருக்களில் ஓடி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க, வாறுகால்களின் மீதுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதோடு, மனித கழிவுகளை வாறுகால்களில் விடுபவர்கள் மீதும்,ஆக்கிரமிப்பு செய்வதர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நகராட்சி அதிகாரிகள் முன் வர வேண்டும்.








      Dinamalar
      Follow us