sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 13, 2026 ,மாசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

இலங்கை அகதிகளுக்கும் இலவச அரிசி ரேஷன் பொருட்கள் வழங்கவும் உத்தரவு

/

இலங்கை அகதிகளுக்கும் இலவச அரிசி ரேஷன் பொருட்கள் வழங்கவும் உத்தரவு

இலங்கை அகதிகளுக்கும் இலவச அரிசி ரேஷன் பொருட்கள் வழங்கவும் உத்தரவு

இலங்கை அகதிகளுக்கும் இலவச அரிசி ரேஷன் பொருட்கள் வழங்கவும் உத்தரவு


ADDED : ஜூலை 14, 2011 09:27 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் குடும்பத்திற்கு மாதம் 20 கிலோ இலவச அரிசியுடன், ரேஷன் கார்டுகளுக்கு வழங்கும் பொருட்களையும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது. ரேஷன் கார்டுக்கு 20 கிலோ இலவச அரிசி போன்று இலங்கை அகதிகளுக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. மற்ற ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் பருப்பு வகைகள், பாமாயில், மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்க அந்தந்த மாவட்டங்களில் உள்ள வழங்கல் அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கை அகதிகளுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு , தனியாக ஒதுக்கீடு செய்து வழங்கவில்லை. ஏற்கனவே வழங்கப்படும் ஒதுக்கீட்டில், ரேஷன் கடைகளில் விற்பனை செய்யப்படாமல் உள்ள பொருட்களை கணக்கிட்டு, அகதிகளுக்கு வழங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கான தனி ஒதுக்கீடு இல்லாததால் அதிகாரிகளும் தவித்து வருகின்றனர். அகதிகளுக்கு தனி ஒதுக்கீடு வழங்கவும் அரசு முன் வர வேண்டும்.








      Dinamalar
      Follow us