sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் :விஜயகாந்த் உருக்கம்

/

எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் :விஜயகாந்த் உருக்கம்

எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் :விஜயகாந்த் உருக்கம்

எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள் :விஜயகாந்த் உருக்கம்


ADDED : அக் 06, 2011 11:54 PM

Google News

ADDED : அக் 06, 2011 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராஜபாளையம் : ''ஜாதி, மதம், பணம் அரசியலில் எடுபடாது, பிரித்தாளும் சூழ்ச்சியை கையாள்வதால் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்,'' என, ராஜபாளையத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.

ராஜபாளையம் நகராட்சி தலைவர் தே.மு.தி.க., வேட்பாளர் சுப்பிரமணிய ராஜா உள்ளிட்ட பல வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்த அவர் பேசியதாவது: உள்ளாட்சி பதவி என்பது கவுரவமானது, சம்பளம் கிடையாது. மின்சாரம், குடிநீர், டாக்டர் சேவை, ரேஷன் கடை 24 மணிநேரமும் கிடைக்கும் என்பார்கள். சத்தியம் கூட செய்வார்கள். அது நடக்காது. உள்ளாட்சியில் மத்திய, மாநில அரசு பணம் ஏராளமாக உள்ளது. நீங்கள் கட்டும் வரிகளில் சில உள்ளாட்சிக்கு செல்கிறது. மரத்தடியில் இன்றும் பள்ளி வகுப்பு நடக்கிறது. கல்லூரி சென்றால் லஞ்சம் கேட்கிறார்கள். வங்கி கடன் என்பது குழப்பமாக உள்ளது. தோட்டம், கிணறை அடகு வைத்து கல்லூரியில் படிக்கும் நிலை உள்ளது. மக்களை நாம் கவனிக்காததால், மக்கள் நம்மை கவனித்து விட்டார்கள் என்ற சூழல் உருவாகவேண்டும். எனது பிறந்தநாளுக்கு பெண் குழந்தைகள், முதியோர் இல்லங்களுக்கு நலதிட்ட உதவிகள் வழங்குகிறேன். எதையும் எதிபார்க்காமல் செய்கிறேன். ஏழைகளுக்கு உதவுபவன் தான் மக்கள் மனதில் நிற்பான். நான் யாரையும் லஞ்சம் வாங்க, கொள்ளையடிக்க விடமாட்டேன், மார்க்சிஸ்ட் கட்சியும் அப்படித்தான். ஜாதி, மதம், பணம் அரசியலில் எடுபடாது. மக்களை பிரித்தாள நினைக்கிறார்கள். தேர்தலில் எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள், என்றார்.பாண்டியராஜன் எம்.எல்.ஏ.,உட்பட பலர் கலந்து கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் வேட்பாளர் நாகலட்சுமியை ஆதரித்து தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசியதாவது:எனது கூட்டத்தில் கலந்து கொண்ட தொண்டரை போலீசார் அடிக்கின்றனர். போலீசார் என்றைக்கும் உண்மையாக இருந்ததில்லை. அவர்களுக்கு பொய் தான் மூல தனம். இவர்களின் பேச்சை கேட்டதால், இன்று கருணாநிதி வீட்டில் உள்ளார். எங்களிடம் தர்மசக்கரம் கையில் உள்ளது. அது சுற்றும் போது அதர்மம் அழிந்து விடும். மக்கள் கூட்டணி வேண்டுமென்று கூறியதால் சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்தோம். கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ,வை பெற்றோம். இம்முறை 29 எம்.எல்.ஏ.க்களை பெற்றோம், என்றார் .






      Dinamalar
      Follow us