/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சவடு மண் அள்ளிய லாரிகள் பறிமுதல்
/
சவடு மண் அள்ளிய லாரிகள் பறிமுதல்
ADDED : மார் 28, 2024 05:36 AM

தளவாய்புரம்: தளவாய்புரம் அடுத்த புத்துாரில் கம்பிக்குளம் கண்மாய் அடுத்த புஞ்சை காட்டில் பனை மரங்களை சேதப்படுத்தி அரசு அனுமதி இன்றி சவடு மண் அள்ளிய மூன்று லாரிகளை போலீசார் கைப்பற்றி மூவர் மீது வழக்கு பதிந்துள்ளனர்.
புத்துார் அருகே அரசு அனுமதி இன்றி தொடர் சவடு மண் திருட்டு நடைபெறுவதாக புகார் வந்தது. இதை அடுத்து தளவாய்புரம் போலீசார் புத்துார் கம்பிக்குளம் கண்மாய் அருகே திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்பகுதி புஞ்சை காட்டில் பனை மரங்களை தோண்டி எடுத்து சவடு மண் திருட்டில் ஈடுபட்ட சுரண்டையை சேர்ந்த மணி, முதுகுளத்துாரை சேர்ந்த சேது, மூன்று வாய்க்காலை சேர்ந்த துரை மூவர் ஈடுபட்டது தெரிந்தது.
இரண்டு டாரஸ், ஒரு லாரியை கைப்பற்றி திருட்டுக்கு உடந்தையாக இருந்தவர்கள் குறித்து தளவாய்புரம் போலீசார் விசாரிக்கின்றனர்.