ADDED : ஜூலை 01, 2011 11:10 PM
அ நிறம் | அளவு
விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நில மோசடி, அபகரிப்பு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக விருதுநகர் ஊரக போலீஸ் இன்ஸ்பெக்டர் பொம்மு தலைமையில் சிறப்பு பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
இதில் மூன்று எஸ்.ஐ., இரண்டு எஸ்.எஸ்.ஐ., நான்கு ஏட்டுகள் அடங்குவர். மாவட்டத்தில் நில மோசடி மற்றும் நில அபகரிப்பு தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் எவ்வித தயக்கமும் இல்லாமல், நஜ்மல் கோடா எஸ்.பி., யிடம் நேரடியாக புகார் கொடுக்கலாம். சிறப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் பொம்முவை அலுவலக போன் 04562 252 552, மொபைல் போன் 94431 93735 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் கொடுக்கலாம். ''நில அபகரிப்பு செயல்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, எஸ்.பி ., எச்சரித்துள்ளார்.
