/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவக்கம்
/
முத்தாலம்மன் கோயில் தேரோட்ட விழா துவக்கம்
ADDED : அக் 06, 2011 11:54 PM
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்ட கலைவிழா
மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது.
வத்திராயிருப்பு முத்தாலம்மன்
கோயில் தேரோட்ட விழாவில் அனைத்து சாதி , மதத்தினரும் பாகுபாடின்றி கலந்து
கொள்வது தனிச்சிறப்பு வாய்ந்தது. இதன் கோயில் விழா நேற்று முன்தினம்
மும்மதத்தினர் பங்கேற்புடன் துவங்கியது. இதில் முனுசாமி ஆர்.டி.ஓ.,
சக்திவேல்டி.எஸ்.பி., டாக்டர் சையத்பாசுதீன் ,மதபோதகர் ஞான ஆனந்தராஜ் ,
மதுரை சமூக அறிவியல் கல்லூரி நிறுவனர் டாக்டர் ராஜா பேசினர் . கலசலிங்கம்
பல்கலை வேந்தர் தி. கலசலிங்கம் குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
காந்திய இயக்க மாநில தலைவர் கரம்சந்த் நல்லுசாமி வரவேற்றார். பக்தசபா
செயலாளர் விவேகானந்தன் நன்றி கூறினார்.

