/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
----குடிநீரில் கலந்து வரும் சாக்கடை கழிவுநீர்
/
----குடிநீரில் கலந்து வரும் சாக்கடை கழிவுநீர்
ADDED : டிச 12, 2025 06:01 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் நக ராட்சியில் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருவதால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ராஜபாளையம் நக ராட்சியின் குடிநீர் பற்றாக்குறையை போக்க 2018 ல் ரூ.197.79 கோடி மதிப்பில் தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் தொடங்கப் பட்டது.
இதேபோல் கழிவுநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக ரூ.258 கோடியில் மத்திய அரசின் அம்ருத் திட்டத்தில் பாதாள சாக்கடை என அடுத்தடுத்து குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன.
இந்நிலையில் பாதாள சாக்கடை கழிவுநீர் அமைப்புகள் முறையாக பராமரிப்பு இன்றி அடிக்கடி பொங்கி தெருக்களிலும் வழிவதுடன் குடிநீர் குழாயில் கலப்பதால் குடிநீருடன் சாக்கடை கழிவு நீர் கலந்து வருகின்றன.
நேற்று காலை காந்தி கலை மன்றம் எதிரே தென்காசி ரோடு சுற்றுப்பகுதியில் சப்ளையான குடிநீர் சாக்கடை கலந்து வந்ததால் அப்பகுதியினர் அதிர்ச்சி அடைந்தனர். குடிநீருக்கு பதில் கரும் நிறத்தில் சாக்கடை கழிவு நீர் வந்து விழுந்ததால் கழிவு நீரை தொட்டிகளில் சேமிக்காமல் வெளி யேற்றினர்.
சரவணன்: குடிநீர் கலங் கலாக வருவதும் லேசான துர்நாற்றம் வருவதும் அடிக்கடி நடக்கும். நேற்று குழாயில் நேரடியாக கழிவு நீர் கலந்து வந்தது அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. வேறு வழியின்றி சேமிக்காமல் வெளியேற்றி உள்ளோம். சாக்கடை கலப்பை அதிகாரிகள் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்.

