/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதடி
/
காத்திருந்து... காத்திருந்து... காலங்கள் போகுதடி
ADDED : ஏப் 27, 2024 03:46 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் வழி சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம் பணிகள் முடிந்து சிறிய வாகனங்கள் செல்லும் சுரங்கப்பாதைக்கு சிமென்ட் பிளாக்குகள் தயாராகி பல ஆண்டுகளை கடந்தும் பணிகள் முடங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
சத்திரப்பட்டி ராஜபாளையம் பகுதி மக்களின் போக்குவரத்திற்கு தீர்வான ரயில்வே மேம்பாலம் முடிந்து செயல்பாட்டிற்கு வந்துவிட்டது. அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தை கடந்து செல்லும் பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக பாலத்தின் அருகிலேயே டி.பி மில்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை பணிகள் அனுமதி வழங்கப்பட்டது.
பாலப் பணிகளுக்கு முன் பயன்பாட்டிற்கு வரவேண்டிய பணிகள் சிமென்ட் பிளாக்குகள் தயாராகியும் ஆண்டுகளை கடந்து காட்சி பொருளாக மாறிவிட்டது.
டி.பி.,மில்ஸ் ரோட்டில் இருந்து எதிரில் உள்ள மில்ஸ் ரோட்டை அடைய ஒவ்வொரு முறையும் இரண்டு கிலோமீட்டர் தொலைவுள்ள மலையடிப்பட்டி ரயில்வே கேட்டிற்க்கும், தியேட்டர் முன்பு தொடங்கும் மேம்பால பாதை வரையும் சுற்ற வேண்டியுள்ளது.
வயது முதிர்ந்தோர், பெண்கள், மாணவிகள், சிறுவர்கள், சிறு வாகனங்கள், ஆம்புலன்ஸ் உள்ளிட்டவை தேவையின்றி மற்ற வாகனங்களோடு நெரிசலில் கடக்க வேண்டியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் நேர விரயமும் ஏற்பட்டு வருகிறது.
அரசியல் கட்சியினர் கடந்த உள்ளாட்சி தேர்தலின் போது பெயரளவிற்கு ஆர்ப்பாட்டங்களை நடத்தி மறந்து விட்டனர். சுரங்க பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.
நெரிசல் குறைய வில்லை
ஸ்ரீராம்விஜய், தொழில் முனைவோர்: அனைத்து வாகனங்களும் மேம்பாலத்தில் ஏறி கடப்பதால் தேவையற்ற எரிபொருள் செலவு, மேம்பாலத்தில் வாகன நெரிசல் போன்றவற்றிற்கு காரணமாகும். இந்நிலை கருதியே குடியிருப்பு வாசிகள், டூவீலர்கள், ஆம்புலன்ஸ் போன்றவை கடந்து செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட இருந்தது.
தற்போது வரை காரணம் தெரியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மலையடிப்பட்டி ரயில்வே கேட்டில் நெரிசல் அதிகரித்துள்ளது.
டிரை வர்க ளுக் கு சுமை
கணேசன்: மேம்பால பணிகளின் போதே சுரங்கப்பாதையும் அமைந்திருந்தால் கார், வேன், ஆட்டோ போன்ற சிறிய ரக வாகன டிரைவர்களுக்கு சுமை குறைந்திருக்கும். எப்போது முடியும் என தெரியாமல் வெயிலிலும் மழையிலும் திறந்தவெளியில் கான்கிரீட் சிமென்ட் பிளாக்குகளை வைத்திருக்கின்றனர். இதன் பாதுகாப்பு, மக்களின் நலன் கருதியாவது பணிகளை விரைவில் தொடங்க வேண்டும்.

