sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 02, 2026 ,தை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

சிவகாசி அருகே கருந்திரிகள் அழிப்பு

/

சிவகாசி அருகே கருந்திரிகள் அழிப்பு

சிவகாசி அருகே கருந்திரிகள் அழிப்பு

சிவகாசி அருகே கருந்திரிகள் அழிப்பு


ADDED : ஜூலை 14, 2011 09:29 PM

Google News

ADDED : ஜூலை 14, 2011 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகாசி : சிவகாசி அருகே அனுமதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பட்டாசுகள் மற்றும் கருந்திரிகளை அதிகாரிகள் அழித்தனர்.

சிவகாசி, வெம்பக்கோட்டை பகுதிகளில் அனுமதி இன்றி பட்டாசு தயாரிக்கப்படுகிறது. இதை கட்டுப்படுத்த அவ்வப்போது அதிகாரிகளால் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு அழிக்கப்படுகின்றன. நேற்று பட்டாசு, தீப்பெட்டி தனித்தாசில்தார் முனியசாமி, தாசில்தார் ராமச்சந்திரன், சாத்தூர் தாசில்தார் சங்கரலிங்கம் ஆகியோர் தலைமையில் வெம்பக்கோட்டை , விஜயகரிசல்குளம், மேலகோதநாச்சியார்புரம், வீ. துரைச்சாமிபுரத்தில் அனுமதியின்றி பட்டாசு, கருந்திரி தயாரிக்கப்படும் வீடுகள், ஷெட்களில் திடீர் சோதனை நடத்தினர். விஜயகரிசல்குளத்தில் குருசாமி, சேகர், காளியப்பன் வீடுகளில் சோதனை செய்துஅங்கிருந்த சரவெடிகளை தண்ணீர் ஊற்றி அழித்தனர்.



அதிகாரிகள் சோதனைக்கு வருவார்கள் என்பதை முன்பே அறிந்த பட்டாசு தயாரித்தவர்கள், வீட்டை சுத்தம் செய்து பூட்டு விட்டு தலைமறைவாகினர். இது போன்ற வீடுகளில் எதும் இல்லாதது கண்டு அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். கோதைநாச்சியார்புரத்தில் கருப்பசாமி, மரியராஜ், சுந்தர்ராஜ் வீடுகளில் தயாரிக்கப்பட்ட 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கருந்திரிகள் , துரைச்சாமிபுரத்தில் அழகர், ராம்பாண்டியன் வீடுகளில் இருந்த 60 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கருந்திரிகளை தண்ணீர் ஊற்றி அழித்தனர்.

காட்டுப்பகுதியில் தென்னங்கூரை அமைத்து அனுமதியின்றி கரிமருந்து திரி தயாரித்ததை கண்டு, கூரைகளை பிரித்து, கரிமருந்து திரியை தண்ணீர் ஊற்றி அழித்தனர். கரிமருந்து திரி தயாரித்த 5 பேர் மீது வெம்பக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து உள்ளனர்.










      Dinamalar
      Follow us