sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 01, 2026 ,தை 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

முன் மாதிரி நகராட்சியாக்குவேன்

/

முன் மாதிரி நகராட்சியாக்குவேன்

முன் மாதிரி நகராட்சியாக்குவேன்

முன் மாதிரி நகராட்சியாக்குவேன்


ADDED : அக் 06, 2011 11:55 PM

Google News

ADDED : அக் 06, 2011 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : '' விருதுநகரை முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன் ,''என ,அ.தி.மு.க., வேட்பாளர் சாந்தி தெரிவித்தார்.

தனக்கும், நகராட்சி வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து பேசுகையில், ''விருதுநகர் நகராட்சியில் வளர்ச்சிப்பணிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை. அனைத்து வார்டுகளிலும், குப்பைகளை அகற்ற முடியாத நிலையில், குண்டும், குழியுமான ரோடுகள், குடி நீருக்காக அல்லல் படும் நிலை உள்ளது. நகராட்சி தலைவராக ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் எனக்கு வாக்களித்தால் விருதுநகர் நகராட்சியை முன் மாதிரி நகராட்சியாக மாற்றுவேன். மக்களின் அடிப்படை பிரச்னையான குப்பைகள் அகற்ற துப்புரவு பணியாளர்களை நியமித்து தூசியில்லாத நகராக மாற்றுவேன். குடிநீர் வினியோகம் சீராக்க குடி நீர் வால்வுகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் அனைத்தும் செயல்பட செய்து , தட்டுப்பாடு இல்லாமல் குடி நீர் வழங்க நடவடிக்கை எடுப்பேன். மேலும், லஞ்சம் இல்லாத நிர்வாகத்தை நடத்துவேன். ஆண்டு தோறும் எனது சொத்துக்கணக்கு பட்டியல் வெளியிடுவேன். நகராட்சி ஆஸ்பத்திரி 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுப்பேன், என்றார்.






      Dinamalar
      Follow us