/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கால்வாய் ஆக்கிரமிப்பால் மூழ்கிய --நெற்பயிர்கள்
/
கால்வாய் ஆக்கிரமிப்பால் மூழ்கிய --நெற்பயிர்கள்
ADDED : நவ 26, 2025 03:20 AM

தளவாய்புரம்: தளவாய்புரம் அருகே கண்மாய் நீர் ஓடை ஆக்கிரமிப்பால் மழை நீர் வெளியேற வழியின்றி வயல்களில் தேங்கி நெற்பயிர்கள் சேதமாகி வருவதாக விவசாயிகள் வேதனையடைந் துள்ளனர்.
தளவாய்புரம் அடுத்த வெங்கடாசலபுரம் கிராமம் அருகே குமுட்டிகுளம் கண்மாய் 80 -ஏக்கருக்கும் அதிகமான பரப்பில் சாகுபடி நடக்கிறது.
இதில் இருந்து கூனங்குளம் கண்மாய்க்கு 12 அடி அகலமுள்ள நீர்வரத்து ஓடை அமைந் துள்ளது.
இதில் பாசன வயலின் உபரி நீரும் வழிந்து செல்லும்.
இந்நிலையில் சுமார் 1500 மீட்டர் தொலைவுள்ள இந்த ஓடை ஒரு சில இடங்களில் 12 அடிக்கு பதிலாக தனிநபர்களின் ஆக்கிரமிப்பால் 4 அடியாக சுருங்கி விட்டது. கனமழையால் கண்மாய் நிறைந்த நிலையில் உபரி நீர் வெளியேற வழியின்றி வயல்களில் தேங்கி 15 நாள் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இரண்டு நாட்களுக்கு அதிகமாக இதே நிலை நீடித்தால் அழுகி பாதிப் படையும்.
அதிகாரிகள் தண்ணீர் வெளியேற ஆக்கிரமிப்புகளை விரைந்து அகற்ற வேண்டும்.
இது குறித்து விவசாயி பாலகிருஷ்ணன்: 2022 முதல் முதல்வர் தனிப் பிரிவு முதல் வி.ஏ.ஓ வரை மனுக்கள் அளித்து நடவடிக்கைக்கு காத்திருக் கிறோம்.
ஜமீன் கொல்லங் கொண்டான், தெற்கு வெங்காநல்லுார் இரண்டு கிராம எல்லைக்கு இடையே வருவதால் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு தேவை.
கடந்த முறை ஆக்கிரமிப்பு குறித்து அளவீடு செய்தனர்.
தேர்தல் பணிகளை காரணம் காட்டி தள்ளிப் போடு கின்றனர். ஒவ்வொரு முறையும் 20 ஏக்கர் வரையிலான பயிர்கள் இதனால் பாதிப்பு அடைகிறது. வருவாய் துறையினர் தீர்வு காண வேண்டும்.

