/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மே மாதங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கும் தேர்தல் பணி
/
மே மாதங்களில் ஓய்வு பெறுபவர்களுக்கும் தேர்தல் பணி
ADDED : ஏப் 01, 2024 06:31 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஆறு மாதங்களுக்குள் பணி ஓய்வு பெற உள்ளவர்களுக்கு தேர்தல் பணி வழங்கக் கூடாது என்ற தேர்தல் ஆணைய அறிவுரையையும் மீறி ஏப்ரல், மே மாதங்களில் ஓய்வு பெற உள்ளவர்களும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தேர்தல் பணியில் இருந்து யார் யாருக்கு விலக்கு வழங்கப்பட வேண்டும் என்பது குறித்து 2023 ஜூன் 7ல் இந்திய தேர்தல் ஆணையம் 10 பக்க அறிவுரைகளை மாநில தலைமை தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பி உள்ளது.
அதில் 6 மாதங்களுக்குள் பணி ஓய்வு பெற உள்ளவர்களும், பணி நீட்டிப்பு செய்யப்பட்டவர்களும் எவ்வித தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்தக் கூடாது என அறிவுறுத்தி உள்ளது.
ஆனால், தேர்தல் ஆணைய விதிமுறைகளை கடைபிடிக்காமல் ஏப்ரல், மே மாத கடைசி நாளில் பணி ஓய்வு பெற உள்ள அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு விருதுநகர், தென்காசி உட்பட பல்வேறு தென் மாவட்ட லோக்சபா தொகுதிகளில் தேர்தல் பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, ஏப்ரல், மே மாதங்களில் பணி ஓய்வு பெறுபவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவதை தவிர்க்க வேண்டுமென அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

