/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--வடிகால் அமைக்காததால் பாழாகி வரும் தேசிய நெடுஞ்சாலைகள்
/
--வடிகால் அமைக்காததால் பாழாகி வரும் தேசிய நெடுஞ்சாலைகள்
--வடிகால் அமைக்காததால் பாழாகி வரும் தேசிய நெடுஞ்சாலைகள்
--வடிகால் அமைக்காததால் பாழாகி வரும் தேசிய நெடுஞ்சாலைகள்
ADDED : டிச 28, 2025 05:46 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் முறையான வடிகால் மழை நீர் தேங்கிஇன்றி ரோடு சேதமாவதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
திருமங்கலம்-- கொல்லம் தேசிய நெடுஞ்சாலை ராஜபாளையம் நகர் பகுதி வழியே செல்லும் நிலையில் முறையான வடிகால் அமைப்பு ஏற்படுத்தவில்லை. இதனால் லேசான மழைக்கும் தண்ணீர் தேங்கி அதன் மீது வாகனங்கள் சென்று சேதம் ஏற்படுத்துகிறது.
இது தவிர நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களில் வணிக கடைகள், ஒட்டல்கள், தனியார் நிறுவனங்களில் இருந்து கழிவு நீர் வடிகால் இன்றியும், சாலையின் நடுவே வாட்டம் முறையாக அமைக்காமல் தேங்கி நிற்கிறது.
கனரக வாகனங்கள் இதன் மீது தொடர்ந்து செல்லும்போது பள்ளம் ஏற்பட்டு உள்ளது. ராஜபாளையம் அரசு கிட்டங்கி, பஞ்சு மார்க்கெட், பழைய பஸ் ஸ்டாண்ட், காந்தி சிலை ரவுண்டானா அருகே, சொக்கர் கோயில் முன்பு உள்ளிட்ட இடங்களில் இந்நிலை காணப்படுகிறது.
ஏற்கனவே இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் தண்ணீர் தேக்கம், சாலை சேதம் உள்ளிட்டவைகளால் வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகின்றன. தொடரும் சிக்கலுக்கு நெடுஞ்சாலைத் துறையினர் முறையான வடிகால் அமைத்து தீர்வு காண வேண்டும் என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

