/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--தேசிய நெடுஞ்சாலை வளைவில் நிறுத்தப்படும் பஸ்களால் --விபத்து அபாயம்
/
--தேசிய நெடுஞ்சாலை வளைவில் நிறுத்தப்படும் பஸ்களால் --விபத்து அபாயம்
--தேசிய நெடுஞ்சாலை வளைவில் நிறுத்தப்படும் பஸ்களால் --விபத்து அபாயம்
--தேசிய நெடுஞ்சாலை வளைவில் நிறுத்தப்படும் பஸ்களால் --விபத்து அபாயம்
ADDED : நவ 12, 2024 04:42 AM

ராஜபாளையம்: ராஜபாளையம் நகர்ப்பகுதி வழியே செல்லும் தேசிய நெடுஞ்சாலையை பஸ் டிப்போவாக மாற்றி ரோட்டின் இரு பக்கமும் நிறுத்தி வருவதால் விபத்து தொடர்வதை தடுக்க அதிகாரிகள் மாற்று வழி காண வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
ராஜபாளையம் நகர் பகுதியில் செல்லும் திருமங்கலம்- - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகம். ஏற்கனவே நீண்ட வருடங்களாக ஆக்கிரமிப்பு அகற்றாமலும், சாலையோர மின்கம்பங்களை ஓரமாக நகற்றி வைக்காமலும் ரோட்டின் அகலம் குறைந்துள்ளது.
இந்நிலையில் பஞ்சு மார்க்கெட் அடுத்த வளைவு பகுதியில் அரசு, தனியார் பஸ்கள் நெடுஞ்சாலை ஓரத்தையே வரிசையாக டிப்போவாக மாற்றி வைத்துள்ளனர். இதனால் விபத்துகள் நிகழ்கின்றன. பழைய பஸ் ஸ்டாண்டிலிருந்து கிராமப் பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் டிரிப் முடிந்து மீண்டும் இயக்குவதற்கு நிறுத்த இடமின்றி இவ்வாறு செய்கின்றனர்.
இதனால் வெளியூரிலிருந்து புதிதாக வரும் லாரிகள், சுற்றுலா பஸ்கள், கனரக வாகனங்கள் வளைவில் முந்தும்போது விபத்துகளை சந்திக்க நேர்கின்றன. தீபாவளியன்று அரசு பஸ்சில் கார் மோதி நான்கு இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். இது தவிர சிறிய சம்பவங்களும் நடைபெறுகிறது.
பழைய பஸ் ஸ்டாண்ட் பணிகள் முடியும் வரை விபத்துகளை தடுக்கும் வகையில் பஸ்களை மாற்று இடத்தில் நிறுத்த வேண்டும் என்பதே அனைவரும் எதிர்பார்ப்பு.