/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--வெயிலின் தாக்கத்தால் கருகும் ரோட்டோர மரக்கன்றுகள்--- கவனம் செலுத்த எதிர்பார்ப்பு

ADDED : செப் 01, 2025 02:04 AM
ராஜபாளையம்: ராஜபாளையம் சுற்று பகுதியில் கடந்த 10 நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் சாலையோர மரக்கன்றுகள் கருகும் நிலைக்கு சென்றுள்ளது. இவற்றுக்கு தனி கவனம் செலுத்த வேண்டும்.
ராஜபாளையம் சுற்று பகுதியில் கடந்த 10 நாட்களுக்கும் அதிகமாக கடும் வெயில் காரணமாக ரோட்டோர மரங்கள் விவசாய நிலங்கள் காய்ந்து வருகிறது. நுாறு நாள் வேலை திட்ட பணியாளர்களால் அந்தந்த ஊராட்சி பகுதி கண்மாய் கரைகளில் ரூ.பல லட்சத்தில் நட்டப்பட்ட மரக்கன்றுகள் நிலை கேள்விக்குறியாகி வருகிறது.
சிறிய அளவு மரக்கன்றுகளாக வைக்கப்பட்டுள்ள இவை குறைந்தது 5 அடி உயரம் வளரும் வரை பேணி காத்து வளர்த்தால் மட்டுமே இவற்றை பலன் தரும் மரமாக மாற்ற முடியும். இந்நிலையில் அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் இவை கருகி நீரிழப்பை சந்தித்து பட்டுப்போகும் நிலைக்கு மாறுகின்றன.
இது குறித்து செல்வம்: ஏற்கனவே 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களால் சாலையோர மரக்கன்றுகள் நட்டு சுற்றிலும் முள்வேலி அமைக்கின்றனர். சிறிது நாட்கள் மட்டும் தண்ணீர் விட்டு பராமரித்து கைவிடப்படும் நிலையில் தற்போது அடித்து வரும் கடும் வெயிலால் பட்டுப் போகும் நிலைக்கு வந்துள்ளது.