தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சூப்பர் ரிப்போர்டர்

சூப்பர் ரிப்போர்டர்

சூப்பர் ரிப்போர்டர்


ADDED : ஏப் 04, 2024 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2024 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அருப்புக்கோட்டை, ஏப்.5----

அருப்புக்கோட்டை அருகே வில்லிபத்திரி கிராமத்தில் நூலகம் இருந்தும் பயன்பாட்டுக்கு வராததாலும், ஓடையை ஆக்கிரமித்து ரோடு போட்டுள்ளதாகவும் மக்கள் புகார் கூறுகின்றனர்.

அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வில்லிபத்திரி ஊராட்சி. இதில் சின்ன வள்ளிகுளம், வில்லிபத்திரி கிராமங்கள் உள்ளது. 9 வார்டுகளும், 15க்கு மேற்பட்ட தெருக்களும் உள்ளன.

காளியம்மன் கோயில் அருகில் உள்ள நீர் ஓடையை ஆக்கிரமிப்பு செய்து ரோடு போடுகின்றனர். ஓடை குறுகி விட்டதால் மழை காலங்களில் அருகில் உள்ள சின்ன வள்ளிகுளம், வழுக்கலொட்டி, பாலவனத்தம்,குல்லூர் சந்தை உட்பட கிராமங்கள்பாதிப்பு அடையும். விவசாயமும் பாதிக்கப்படும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற ஊர் மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

ஊரில் நூலகம் இருந்தும்பல ஆண்டுகளாக திறக்கப்படவில்லை. இ சேவை மையமும் சரிவர இயங்குவதில்லை. பல தெருக்களில் வாறுகால்கள் சேதம் அடைந்து கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. பேவர் பிளாக் கற்கள் பதிக்க வேண்டும். தெருக்களில் போதுமான மின் விளக்குகள் இல்லை.

ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் குழாய் பதித்துள்ளனர். ஏற்கனவே உள்ள மேல்நிலைத் தொட்டியில் குழாய்களை இணைத்துஉள்ளதால் தண்ணீர் சரி வர வருவதில்லை. வாரத்திற்கு 2 நாள் தான் வருகிறது. தெருக்களில் பொது அடி குழாய்கள் போடப்பட வேண்டும். பொது கழிப்பறைகள் கட்டப்பட வேண்டும்.

ஊரில் உள்ள கண்மாய் பராமரிப்பு இன்றி உள்ளது. அவற்றை தூர்வாரி மழைநீர் சேகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் வரத்து ஓடைகளை சரி செய்ய வேண்டும். இங்கு உள்ள அங்கன்வாடி மையத்தின் முன்பு பள்ளமாக இருப்பதால் மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் சிரமப்பட்டு வர வேண்டி உள்ளது. மையத்தின் முன்புறத்தில் தளம் அமைக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us