/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
திண்டாட்டம்: மாவட்டத்தில் தொடருது முத்திரை தாள் தட்டுப்பாடு : எங்கே கிடைக்கும் என அலைந்து திரியும் மக்கள்
/
திண்டாட்டம்: மாவட்டத்தில் தொடருது முத்திரை தாள் தட்டுப்பாடு : எங்கே கிடைக்கும் என அலைந்து திரியும் மக்கள்
திண்டாட்டம்: மாவட்டத்தில் தொடருது முத்திரை தாள் தட்டுப்பாடு : எங்கே கிடைக்கும் என அலைந்து திரியும் மக்கள்
திண்டாட்டம்: மாவட்டத்தில் தொடருது முத்திரை தாள் தட்டுப்பாடு : எங்கே கிடைக்கும் என அலைந்து திரியும் மக்கள்
ADDED : ஏப் 27, 2024 03:50 AM
விருதுநகர்:   விருதுநகர் மாவட்டத்தில் தொடர்ந்து முத்திரை தாள் பற்றாக்குறை நிலவுவதால் மக்கள் திண்டாடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் முத்திரை தாள் தட்டுப்பாடு சில மாதங்களாக நிலவி வருகிறது. கிளை கருவூல அலுவலகங்களில் இருந்து பத்திர விற்பனையாளர்களுக்கு முத்திரை தாள் எதுவும் வழங்காப்படாமல் உள்ளது.  விலை குறைவான ,விலை உயர்ந்த முத்திரை தாள்களும் இருப்பில் இல்லை என விற்பனையாளர்கள் கூறுகின்றனர்.
அதாவது ரூ.20, 50, 100 முத்திரைத்தாள்கள், ரூ.15, 20 ஆயிரம் முத்திரை தாள்களும் சப்ளையில் இல்லை . இது நாள் வரையில் ரூ.5 ஆயிரம் முத்திரை தாளுக்கும் தற்போது தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.  வெறும் ரூ.ஆயிரம் முத்திரை தாள் மட்டுமே கிடைக்கிறது.
அதிக விலை முத்திரை தாள்கள் சொத்து பரிமாற்றத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இதில் தட்டுப்பாடு என்றாலும்  இ ஸ்டாம்பிங், ஆன்லைன் சர்வீஸ் மூலம் பத்திரப்பதிவு நடந்து விடும். ஆனால் பதிவு செய்யப்படாத ஆவண தேவைகளுக்கு குறைந்த விலை முத்திரை தாள் தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் அதிகளவில் பயன்படுத்தும் முத்திரை தாள்களும் கூட.  வங்கிகளில் நகைகள் திருப்புவது, கடன் ஆவணங்களுக்கு குறைந்த விலை முத்திரை தாள்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பழைய பத்திரங்களுக்கு நகல் போடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
ரூ.20 முத்திரைத்தாள் சாதாரண தேவைகள் பலவற்றிற்கும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.  இன்னும் ஒன்றரை மாதத்தில் பள்ளி, கல்லுாரிகள் திறந்து விட்டால் இந்த முத்திரை தாள்கள் தேவைப்படும். ராகிங் எதிர்ப்புக்கு இந்த முத்திரை தாள் வாங்குவர். வருவாய் பிரிவில் சான்றுகள் பெறுவதற்கும் பயன்படுத்துவர்.
சொத்து பரிமாற்றத்தில் ஆன்லைன் நடைமுறை பின்பற்றப்பட்டாலும் விலை உயர்ந்த முத்திரை தாளை பயன்படுத்த பலர் ஆர்வம் காட்டுகின்றனர். தற்போது தட்டுப்பாட்டால் பத்திரப்பதிவை தள்ளி போடவும் செய்கின்றனர்.   எனவே மாவட்ட நிர்வாகம் மக்களுக்கு தட்டுப்பாடின்றி முத்திரை தாள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

