/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
10ம் வகுப்பு தேர்வு துவக்கம்: 492 பேர் ஆப்சென்ட்
/
10ம் வகுப்பு தேர்வு துவக்கம்: 492 பேர் ஆப்சென்ட்
ADDED : மார் 26, 2024 11:54 PM

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கியது.
தமிழ் தேர்வை எழுத 10 ஆயிரத்து 908 மாணவர்கள், 11 ஆயிரத்து 97 மாணவிகள் என 22 ஆயிரத்து 5 மாணவர்கள்விண்ணப்பித்திருந்த நிலையில் 10 ஆயிரத்து 589 மாணவர்கள், 10 ஆயிரத்து 924 மாணவிகள் என 21 ஆயிரத்து 513 மாணவர்கள் தேர்வெழுதினர். இதில் 277 மாற்றுத்திறனாளி மாணவர்களும் அடங்குவர். இவர்களுக்காக தரைதளத்தில் உள்ள தேர்வு அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வில் 492 மாணவர்கள் ஆப்சென்ட் ஆகியுள்ளனர். விருதுநகர் கல்வி மாவட்டத்தில் 1025 பேர், சிவகாசி கல்வி மாவட்டத்தில் 1216 பேர் என 2241 அலுவலர்கள், ஆசிரியர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

