ADDED : மே 20, 2026 06:25 PM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் பின் தங்கி 96.02 சதவீதத்துடன் 14வது இடத்திற்கு சென்றதோடு, தமிழ் மொழி தேர்வில் மட்டும் 161 பேர் தேர்ச்சி பெறாமல் உள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் நடப்பாண்டு 10ம் வகுப்பு பொதுத்தேர்வை 353 பள்ளிகளை சேர்ந்த 11,771 மாணவர்கள், 12,363 மாணவிகள் என மொத்தம் 24,134 பேர் 115 தேர்வு மையங்களில் எழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்ற வெளியான நிலையில் 11,064 மாணவர்கள், 12,109 மாணவிகள் என மொத்தம் 23,173 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவர்களில் 707 மாணவர்கள், 254 மாணவிகள் என மொத்தம் 961 பேர் தேர்ச்சி பெறவில்லை. இதில் தமிழ் மொழி தேர்வில் மட்டும் 161 பேர் தேர்ச்சி பெறவில்லை. மேலும் 70 அரசுப்பள்ளிகள், 28 அரசு உதவிபெறும் பள்ளிகள், 61 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 159 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இவற்றில் ஆங்கிலத்தில் 8 மாணவர்கள், கணிதத்தில் 104 மாணவர்கள், அறிவியலில் 538 மாணவர்கள், சமூக அறிவியலில் 76 மாணவர்கள் சென்டம் பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி 93.99 சதவீதமும், மாணவிகளின் தேர்ச்சி 97.95 சதவீதமும் உள்ளது.
