/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தல் ஸ்ரீவில்லிபுத்துாரில் 3 பேர் கைது
/
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தல் ஸ்ரீவில்லிபுத்துாரில் 3 பேர் கைது
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தல் ஸ்ரீவில்லிபுத்துாரில் 3 பேர் கைது
ஒடிசாவில் இருந்து கஞ்சா கடத்தல் ஸ்ரீவில்லிபுத்துாரில் 3 பேர் கைது
ADDED : மார் 23, 2024 01:54 AM

ஸ்ரீவில்லிபுத்துார்:ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் வெளி மாநில மில் தொழிலாளர்களுக்கு விற்ற ஒடிசாவைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரைச் சுற்றியுள்ள நூற்பாலைகளில் தங்கி ஒடிசா, பீகார் உள்ளிட்ட வெளி மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்காக அதிகளவில் கஞ்சா கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை 6:00 மணியளவில் நாச்சியார்பட்டி விலக்கு அருகில் தனிப்படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு டூவீலரில் வந்த மூவரை விசாரித்தனர். டூவீலரை சோதனையிட்ட போது 2 கிலோ உயர் ரக கஞ்சா இருந்தது தெரிந்தது.
போலீஸ் நடத்திய விசாரணையில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஜித் 38, குணா நாயக் 22, அஜித் நாயக் 23, என்பதும், அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் மில்லில் தங்கி வேலை செய்வதும் தெரிய வந்தது. ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் பணிபுரியும் வெளி மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்வதும் தெரிந்தது. மூவரையும் கைது செய்த எஸ்.ஐ., செல்லபாண்டியன் மற்றும் போலீசார் 2 கிலோ கஞ்சா, ஒரு டூவீலரை பறிமுதல் செய்தனர்.

