/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மக்கள் நீதிமன்றத்தில் 36 வழக்குகள் சமரசம்
/
மக்கள் நீதிமன்றத்தில் 36 வழக்குகள் சமரசம்
ADDED : மார் 13, 2025 04:32 AM
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சட்ட பணிகள் குழு சார்பாக நடத்தப்பட்ட தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 36 வழக்குகள் நீதிபதிகள் தலைமையில் சமரசம் செய்யப்பட்டது.
அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த கோர்ட் வளாகத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு சார்பு நீதிபதி செல்வன் ஜேசு ராஜா தலைமை வகித்தார். இதில் நிலுவையில் உள்ள 250க்கும் மேற்பட்ட வழக்குகள் சமரசத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு 36 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இழப்பீடு தொகையாக 68 லட்சத்து 51 ஆயிரத்து 500 ரூபாய் பெற்றுத் தரப்பட்டது.
இதில் குற்றவியல் கோர்ட் நீதிபதி முத்து இசக்கி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவரஞ்சனி, அரசு மருத்துவமனை டாக்டர் அருணாச்சலம், வழக்கறிஞர் சங்கத் தலைவர் ஜோபு ராம்குமார், மூத்த வக்கீல்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சட்ட பணி குழுவினர் செய்தனர்.