/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கெமிக்கல் தடவிய 45 கி., மீன்கள் பறிமுதல்
/
கெமிக்கல் தடவிய 45 கி., மீன்கள் பறிமுதல்
ADDED : மே 21, 2024 07:18 AM
அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை பகுதிகளில் மீன்கள் கெடாமல் இருக்க பார்மலின் திரவம் கலந்த பனிக்கட்டியில் விற்பதற்காக வைத்திருந்த 45 கிலோ மீன்களைஉணவு பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அருப்புக்கோட்டையில் மீன் கடைகளில் மீன்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க, பார்மலின் திரவத்தை பனிக்கட்டியில் கலந்து மீன்கள் விற்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து, பார்மலினை கண்டு பிடிக்கும் கிட் கொண்டு வரப்பட்டு, மீன் துறை அலுவலர் சுபனா, உணவு பாதுகாப்பு அலுவலர் காசிம் மற்றும் அலுவலர்கள் அருப்புக்கோட்டை காந்தி நகர், பாலையம்பட்டி, காரியாபட்டி உட்பட பகுதிகளில் ஆய்வு செய்தனர்.
இதில், கடைகளில் பல நாட்கள் வைக்கப்பட்டிருந்த 45 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளுக்கு 75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்ற கடைகளுக்கு ரூ.1.5 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 7 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.- -

