ADDED : மே 06, 2026 11:22 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார், மே 7
ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மானகசேரியில் இருந்து கூனம்பட்டி செல்லும் ரோட்டில் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் ஒரு நூற்றாண்டு பழமையான ஆலமரம் இருந்தது.
இதனை சுற்றி கழிவுகள், காய்ந்த சருகுகள் கிடந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஆலமரம் தீப்பிடித்து கொழுந்து விட்டு எரிந்தது.
ஸ்ரீவில்லிபுத்துார் தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர். நூற்றாண்டு பெருமைமிக்க ஆலமரம் தீப்பிடித்து எரிந்ததால் கிராம மக்கள் வேதனை அடைந்தனர்.
