/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சிவகாசியில் பட்டாசு கழிவில் தீ விபத்து
/
சிவகாசியில் பட்டாசு கழிவில் தீ விபத்து
ADDED : ஜூலை 02, 2024 06:31 AM

சிவகாசி : சிவகாசி அருகே தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ஊருணியை சுத்தம் செய்து, குப்பைகளுக்கு தீ வைத்த போது, அங்கு சட்ட விரோதமாக கொட்டப்பட்டிருந்த பட்டாசு கழிவினால் தீ விபத்து ஏற்பட்டது.
சிவகாசி அருகே வி.முத்துராமலிங்கபுரத்தில் சுவரம்பட்டி ஊருணியில் தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் சீரமைக்கும் பணி நடந்தது. இதில் பணி முடிந்த பின்னர் வேலை செய்தவர்கள் குப்பையை ஒரே இடத்தில் குவித்து வைத்து தீ வைத்தனர். சிறிது நேரத்தில் அந்த குப்பை பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
சிவகாசி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். சம்பவ இடத்தில் தீத்தடுப்பு குழு உதவி மாவட்ட அலுவலர் தாமோதரன், சிவகாசி நிலைய அலுவலர் வெங்கடேசன் ஆய்வு செய்தனர். விசாரணையில் ஊருணியில் குப்பையுடன் சேர்த்து பட்டாசு கழிவுகளை கொட்டியது தெரியவந்தது.
நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில் பட்டாசு கழிவுகளை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.